/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி அருவியில் திரண்ட சுற்றுலா பயணியர்: வார விடுமுறையை கொண்டாடினர்
/
அதிரப்பள்ளி அருவியில் திரண்ட சுற்றுலா பயணியர்: வார விடுமுறையை கொண்டாடினர்
அதிரப்பள்ளி அருவியில் திரண்ட சுற்றுலா பயணியர்: வார விடுமுறையை கொண்டாடினர்
அதிரப்பள்ளி அருவியில் திரண்ட சுற்றுலா பயணியர்: வார விடுமுறையை கொண்டாடினர்
ADDED : நவ 03, 2025 01:49 AM

வால்பாறை: வார விடுமுறை நாட்களில், அதிரப்பள்ளி அருவியில் குளிக்க இருமாநில சுற்றுலாபயணியர் திரண்டனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளதால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.
பருவ மழைக்கு பின், வால்பாறை மற்றும் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிகளில் குளு குளு சீசன் துவங்கியுள்ளதால், அவர்கள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.
வால்பாறையில் நேற்று முன் தினம் முதல், இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அதிரப்பள்ளி அருவியில் இருமாநில சுற்றுலா பயணியர் அதிக அளவில் திரண்டனர்.
சுற்றுலாபயணியர் கூறியதாவது: கேரளாவில் தற்போது மழைக்கு பின் அருவிகளில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். வால்பாறையில் இ -பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதிக அளவில் தமிழகத்தில் இருந்தும் அருவியை கண்டு ரசிக்க திரண்டுள்ளனர்.
வார விடுமுறை நாட்கள் என்பதால், அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் இருமாநில சுற்றுலாபயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கேரளாவில் மழைப்பொழிவு குறைந்த நிலையில் இங்குள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணியர் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழக கேரள எல்லையில் உள்ள வால்பாறையில் இ - பாஸ் கட்டாயமாக்கபட்டாலும், சுற்றுலாபயணியர் வழக்கம் போல் அதிரப்பள்ளி அருவிக்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் அதிரப்பள்ளியில் மிகவும் ஆழமான பகுதிகளில் சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதிப்பதில்லை' என்றனர்.

