/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
/
புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 15, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், அன்பிய குடும்பங்களின் சார்பில், கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமை வகித்தார். சிஸ்டர் பேபி வரவேற்றார். பிரதர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். பாதிரியார் லூர்துசாமி விழாவை துவக்கி வைத்தார். விழாவில் நடனங்கள், பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளை ரான்சி, ஷீலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் பங்கு மக்கள் பங்கேற்றனர்.

