/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
அன்னூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2025 05:16 AM

அன்னூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அன்னூர், சத்தி சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. ஆயர் சாந்தகுமார் சிறப்பு செய்தி அளித்தார்.
காலை 9:00 மணிக்கு இரண்டாவது ஆராதனை நடந்தது. ஆராதனையில் பங்கேற்ற அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. திரளானவர்கள் பங்கேற்றனர். எல்லப்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், தெலுங்குபாளையம், பொன்னே கவுண்டன் புதூர், பொகலூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ., ஆலயங்களில் நேற்று கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., ஆலயம், பொன்னே கவுண்டன் புதூர், கெம்பநாயக்கன்பாளையம், எல்லப்பாளையம், தெலுங்குபாளையம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் அலங்கார விளக்குகளால் மின் ஒளியில் ஜொலித்தன.
மேட்டுப்பாளையம்: -: பனிக்காலத்தில், உணவில் கசப்பு, காரம், துவர்ப்பு தவிர்ப்பது நல்லது எனவும், சளி தொல்லை இல்லாமல் இருக்க, தினமும் ஒரு ரசம் சாப்பிட்டால் நல்லது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தோலம்பாளையம் அரசு ஆயுர்வேத மருத்துவமனையின், உதவி மருத்துவர் மேகலை கூறியதாவது:-
பனி காலத்தில் வெல்லத்தில் செய்த இனிப்புகளை உண்பது நலம். எண்ணெய் தேய்த்து குளித்தால், தோல் வறட்சியை தடுக்கலாம். குளிர் காற்று காதின் வழியே சென்று மூக்கு மற்றும் தொண்டைக்கு செல்லும்போது, தொண்டை வலி, சுவாச கோளாறுகள் ஏற்படலாம். காதுகளை சுத்தமான பஞ்சுவால் அடைத்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில், 'தசமூல கடுத்ரயம்' கஷாயம், 10 மூலிகைகளின் வேர் மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்தவை ஆகும். இதை பயன்படுத்தும் போது, சுவாச கோளாறுகள் வராமல் தடுக்கப்படும். இவ்வாறு மேகலை கூறினார்.
காரமடை ஆரம்ப சுகாதார நிலைய, ஹோமியோபதி பிரிவு உதவி மருத்துவர் ஜெயஸ்ரீ மீனாட்சி கூறுகையில், மிளகு ரசம், தக்காளி ரசம், கண்டங்கத்திரி ரசம் போன்று தினமும் ஒரு ரசம் சாப்பிடுவது இக்காலத்தில் மிகவும் நல்லது. அதேபோல் காய்ச்சிய குடிநீரில் துளசியை போட்டு வைத்து, குடித்து வந்தாலும் நல்லது. இதனால் சளி பிடிக்காது” என்றார்.-

