/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா
/
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 24, 2024 07:04 AM

மேட்டுப்பாளையம்; கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
மேட்டுப்பாளையம் நகரில் ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் ஆர்.சி., ஆலயமும், யோவான் சி.எஸ்.ஐ., ஆலயமும் உள்ளன.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இரண்டு ஆலயங்களும், மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு குழந்தை இயேசு பிறப்பு விழா என்னும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு பாதரியார் ஹென்றி லாரன்ஸ், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அதேபோன்று சி.எஸ்.ஐ, யோவான் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, 25ம் தேதி அதிகாலை, சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் சிவன்புரத்தில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை என்னும் வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்த ஆலயம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.