/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிறிஸ்துமஸ் பண்டிகை கோவையில் கோலாகலம்
/
கிறிஸ்துமஸ் பண்டிகை கோவையில் கோலாகலம்
ADDED : டிச 25, 2024 10:36 PM

கோவை; கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று, கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள பல்வேறு தேவாலயங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு, தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்று உலக அமைதி, மகிழ்ச்சி, அன்பு, சகோதரத்துவம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
ரத்தினபுரியில் உள்ள சின்னப்பர் தேவாலயத்தில், சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி, ரத்தினபுரி சின்னப்பர் தேவாலய பாதிரியார் தன்ராஜ், பேரூர் ஆதீனத்தில் உள்ள உமாபதி தம்பிரான் சுவாமிகள், டோனி சிங் உள்ளிட்டோர், கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
தொடர்ந்து நேற்று காலையும், தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

