/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பகிர்வு விழா
/
அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பகிர்வு விழா
ADDED : டிச 23, 2024 03:54 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ஆலயத்தில் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில், தத்துக் குடும்பத்தினருக்கு புத்தாடைகள், உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் விழாவுக்கு தலைமை வகித்து, புத்தாடைகள், அரிசி, பருப்பு, கேக் ஆகிய உணவுப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். சபையின் தலைவர் எலிசபெத் வரவேற்றார். பொருளாளர் மணி சேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் பிரான்சிஸ், உறுப்பினர் மைக்கல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தத்துக் குடும்பத்தினருக்கும், ஏழை எளிய கிறிஸ்துவ மக்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று, காரமடை உள்ள புனித மகதலா மரியா ஆலயத்தில், புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில், புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. பங்கு பாதிரியார் சிஜு, தத்துக் குடும்பத்தினருக்கு புத்தாடைகளை வழங்கினார். மைக்கேல் அஞ்சலோ நன்றி கூறினார்

