/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
தேவாலயம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : அக் 15, 2024 10:12 PM
வால்பாறை: வால்பாறை புனித லுாக்கா தேவாலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்று விழா நடந்தது.
வால்பாறை கோ-ஆப்ரேடிவ் காலனியில் உள்ள புனித லுாக்கா தேவாலயத் தேர்த்திருவிழா வரும், 18ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, தேவாலயத்தில் கொடியேற்று விழா ஆலய பங்கு தந்தை ஜிஜோ தலைமையில் நடந்தது.
விழாவில், தினமும், காலை, 7:00 மணிக்கு திருப்பலி, மாலை, 4:30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும், 18ம் தேதி இரவு, 7:00 மணிக்கு புனிதசெபாஸ்தியார் மற்றும் அன்னை ஆரோக்கிய மாதாவின் திருவுருவ சிலைகள் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு, வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக சென்று, நள்ளிரவில் ஆலயத்தை சென்றடைகிறது. விழா ஏற்பாடுகளை ஆலயபங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.