/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.ஏ. ஆண்டு பொதுக்குழு கூட்டம்
/
சி.ஐ.ஏ. ஆண்டு பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 31, 2025 11:38 PM

கோவை; சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேசன் (சி.ஐ.ஏ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஆவாரம்பாளையம், கோஇந்தியா அரங்கத்தில் நடந்தது. சி.ஐ.ஏ., தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்.ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) சுவாமிநாதன் பேசியதாவது:
கோவை வளர்ச்சிக்கு தொழில் துறையினரின் பங்களிப்பு மிக அவசியமானது. குறு சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். தொழில் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்.
வியாபாரம், வணிக வளர்ச்சிக்கேற்ப தேவையான முடிவுகள் எடுக்கிறோம். தொழில் வளர்ச்சியடைந்தால் மட்டுமே வரி வருமானம் நல்ல முறையில் இருக்கும். உங்களது தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
சி.ஐ.ஏ., எம்.எஸ்.எம்.இ., தொழில் வளர்ச்சி மலரை, 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் வெளியிட, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகம் சிவா, எஸ்.ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

