/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையில் சிகாடோகா இலைப்புள்ளி நோய்
/
வாழையில் சிகாடோகா இலைப்புள்ளி நோய்
ADDED : ஜன 12, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் வாழையில் ஏற்படும் சிகாடோகா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், வாழை சாகுபடி 200 ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் செய்யப்படுகிறது. இதில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் பரவலாக சிகாடோகா இலைப்புள்ளி நோய் தாக்குதல் உள்ளது.
இதை கட்டுப்படுத்த, இலைப்புள்ளி நோய் தாக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு அடி இலைகளை அகற்றி, எரித்தோ அல்லது மண்ணில் புதைக்கவோ வேண்டும். கார்பன்டாசிம், 500 கிராம் அல்லது மான்கோசெப் 1 கிலோவை, ஒரு ஹெக்டேருக்கு தண்ணீரில் கலந்து, ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.