/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.இ.டி., 17வது பட்டமளிப்பு விழா
/
சி.ஐ.இ.டி., 17வது பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 20, 2024 11:59 PM

கோவை;நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டினம், கோயத்துார் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (சி.ஐ.இ. டி.,) சார்பில், 17வது பட்டமளிப்பு விழா நடந்தது. கோவை கலைமகள் கல்வி நிறுவனங்களின் கல்வி இயக்குனர் நடராஜன் விழாவிற்கு தலைமை வகித்தார்.
சென்னை செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். சுமார், 164 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.
சி.ஐ.இ.டி., கல்லுாரியின் இயக்குனர் சின்னராஜூ, கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் தங்கவேலு, அறங்காவலர் நர்மதா, டீன் மணிகண்டன் சுப்பிரமணியன், முதல்வர்கள் நாகராஜன், கலாமணி ஆகியோர் கலந்துகொண்னர்.

