/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.37 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்
/
ரூ.37 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்
ADDED : ஆக 23, 2025 07:34 PM

கோவை:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து, கோவைக்கு கடத்தி வரப்பட்ட, 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகரெட், இ - சிகரெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, ஷார்ஜாவில் இருந்து, ஏர் அரேபியா விமானம் கோவை வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில், ஏழு பயணியர் தங்கள் உடமைகளில் சிகரெட் பாக்கெட்டுகள், இ - சிகரெட்கள், மொபைல்போன்கள், லேப்டாப்களை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள், திருவாரூர் தருண்சேகரன், 35, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது அமானுல்லா சுல்தான், 38, பிரத்தியுனன் கெங்கமுத்து, 32, சிவகங்கையைச் சேர்ந்த யாசர் அராபத் அப்துல் ஜப்பார், 39, பைசல் அகமது முகமது யூசுப், 37, திருநெல்வேலியை சேர்ந்த அஜ்மீர் காஜா மைதீன், 42, மற்றும் சென்னையைச் சேர்ந்த மன்சூர் கான் பாபு, 32 என, கண்டறியப்பட்டது.
மொத்தம், 1,461 சிகரெட் பெட்டிகள், 213 இ - சிகரெட்கள், 12 மொபைல்போன்கள் மற்றும் 8 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.