ADDED : மார் 16, 2026 06:37 AM

கோவை: சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக தேவராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2026-27ம் ஆண்டுக்கான, சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவராக தேவராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, யு.ஆர்.சி., கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநரான இவர், சி.ஐ.ஐ., ஈரோடு கிளை தலைவராக பணியாற்றியுள்ளார். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில், 28 ஆண்டுகள் அனுபவம் உடையவர். கட்டுமான மற்றும் உள் கட்டமைப்பு துறை செயல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஐ.எல்.சி.இ., என்ற வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். ஈரோடு டெக்ஸ்வேலி மற்றும் ஈரோடு கஸ்துாரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை நிறுவனத்தின் பிரதிநிதியாக உள்ளார்.
அதே போல, சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் துணை தலைவராக ஜெ.முருகவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆன்லைன் திருமண சேவை நிறுவனமான, மேட்ரிமோனி டாட்காம் லிமிடெட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். சி.ஐ.ஐ., சென்னை மண்டல தலைவர் மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
