/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்கள் எதிர்ப்பால் சுற்றறிக்கை வாபஸ்
/
ஆசிரியர்கள் எதிர்ப்பால் சுற்றறிக்கை வாபஸ்
ADDED : டிச 12, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போது, கமிஷனரின் முன் அனுமதி பெற வேண்டும் என, கடந்த 5ம் தேதி மாநகராட்சி கல்வி அலுவலரால், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டது.
இந்த அறிக்கைக்கு, இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி கல்வி அலுவலரை நேரில் சந்தித்து, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சுற்றறிக்கை மாநகராட்சி கல்வி அலுவலரால் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இந்த தகவலை, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகி அருளானந்தம் தெரிவித்துள்ளார்.