/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.டி.யூ., புதிய நிர்வாகிகள் தேர்வு
/
சி.ஐ.டி.யூ., புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 10, 2025 12:06 AM

கோவை: கோவையில், நடந்த சி.ஐ.டி.யூ., மாநாட்டில், அந்த அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ.,வின் 16வது மாநில மாநாடு நடைபெற்றது. நான்கு நாட்களாக நடந்த மாநாடு, நேற்று நிறைவு பெற்றது. சி.ஐ.டி.யூ., அகில இந்திய தலைவர் ஹேமலதா, நிறைவுரையாற்றினார்.
இந்த மாநாட்டில், 'எட்டு மணி நேர வேலை நேரத்தை உயர்த்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்; மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்; அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சி.ஐ.டி.யூ., அமைப்புக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, சி.ஐ.டி.யூ., மாநில தலைவராக சுகுமாறன், பொதுச்செயலராக கண்ணன், பொருளாளராக ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணை பொதுச்செயலர்களாக, குமார், திருச்செல்வன், ஆறுமுக நயினர், முத்துக்குமார் உட்பட 41 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

