/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் விழுந்தது கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் பலி
/
கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் விழுந்தது கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் விழுந்தது கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் விழுந்தது கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் பலி
ADDED : நவ 10, 2025 12:09 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநில பாலக்காடு நுாறடி சாலை பகுதியைச்சேர்ந்தவரும், கொச்சியில் தனியார் ஐ.டி., நிறுவன ஊழியருமான ரோஹன் ரஞ்சித் 24, நுாறணி பகுதியை சேர்ந்த கார் ஒர்க் ஷாப் ஊழியரான ரோஹன் சந்தோஷ், 22, யாக்கரை பகுதியைச் சேர்ந்த பாம்பாடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவனுமான சனுாஷ் 19, சந்தரநகர் பகுதியை சேர்ந்த பொறியாளரான ஆதித்யன் 23, யாக்கரை பகுதியைச் சேர்ந்த ரிஷி 24, ஐ.டி., நிறுவன ஊழியர், நெம்மாரா பகுதியைச் சேர்ந்த கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் முதுகலை மாணவர் ஜிதின் 21.
இவர்கள் நண்பர்கள். வார இறுதியில் இவர்கள் காரில் 'நைட் ரைட்' போவது வழக்கம்.
இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவில் காரில் (மாருதி சுசுகி சியாஸ்) 'நைட் ரைட்' சென்றனர்.
இரவு, 11:00 மணியளில் சித்தூர் பகுதியில் இருந்து திரும்பி பாலக்காடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கல்லிங்கல் என்ற பகுதி வைத்து திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் விழுந்தது. இந்த விபத்தில், ரோஹன் ரஞ்சித், ரோஹன் சந்தோஷ். சனூஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சேர்ந்து மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த மற்ற மூவரை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து, பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

