ADDED : நவ 10, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 76, இவரது மனைவி புஷ்பாத்தாள், 65. இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனநலம் பாதிக்கப்பட்டு, பெற்றோருடன் வசித்து வந்தார். இளைய மகன், திருமணமாகி அருகே வசித்து வருகிறார். பெரியசாமி - புஷ்பாத்தாள் தம்பதி, மூத்த மகனுடன் சேர்ந்து அங்குள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
பெரியசாமிக்கும், புஷ்பாத்தாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படும். தனக்கு சூன்யம் வைத்து விட்டதாக கூறி, மனைவியுடன் கணவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த கணவர், மரக்கட்டையால் தாக்கியதில் மனைவி ரத்த வெள்ளத்தில் பலியானார். பெரியசாமியை வெள்ளகோ வில் போலீசார் கைது செய்தனர்.

