ADDED : ஆக 18, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சென்னையில் போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் மீது, போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.