/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
/
சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 05:02 AM
வால்பாறை : 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா'வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, சி.ஐ.டி.யு., தெரிவித்துள்ளது.
வளமையமான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வரவும், நீர் ஆதாரங்களின் முழுபயனை அடைதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, 'சுற்றுச்சூழல்உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் வால்பாறை ஏ.ஐ.டி.யு.சி., பொதுசெயலாளர் பரமசிவம், மத்திய வனத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நான்கு தலைமுறைகளாக தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களால், வன விலங்குகளுக்கோ, வனத்திற்கோ எந்த வித பாதிப்பும் இல்லை. ஏழை, எளிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குறைவான தினக்கூலி அடிப்படையில் எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
வனத்திற்கும், வனவிலங்குகளுக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஏழை மக்களை விரட்டும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது.
வால்பாறை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.