தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : செப் 18, 2024 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 10:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வழிப்பறி செய்தவர்கள் கைது


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார், 45. உறவினரை பார்ப்பதற்காக, அசோக் அவரது தம்பியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, மருத்துவமனை அருகில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த இருவர் அசோக்கை வழிமறித்தனர்.

தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்துள்ளனர். அசோக் குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த ராஜா, 38 மற்றும் பாலக்காட்டை சேர்ந்த அபுதாகீர், 28 ஆகியோரை கைது செய்தனர்.

அழுகிய நிலையில் சடலம்


கல்வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் யுகில் மைக்கேல், 62. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் அதிகம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி, வீட்டு உரிமையாளர் யுகினை பார்த்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீடு உள்பக்கம் இருந்து பூட்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, யுகினின் மனைவி ஜோஸ்வினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஜோஸ்வின் கதவை உடைத்து பார்த்தபோது, யுகின் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us