வழிப்பறி வாலிபர் கைது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம்,28. இவர் ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் மது பாரில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பருடன் ராமநாதபுரம் வள்ளியம்மாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ. 1250 பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி ஓடினார்.
சம்பவம் தொடர்பாக மகாலிங்கம் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்து சென்றது, திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ஆகாஷ்,21 என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சூதாட்டம்; எட்டு பேர் கைது
நீலிகோணாம்பாளையம் பகுதியில் உள்ள நீலியம்மன் கோவில் அருகில் உள்ள மைதானத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட சிங்காநல்லூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த அரவிந்தன், 31, வரதராஜபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார்,50, நாகமணி, 28, குமாரசாமி, 30, எஸ்.ஐ.எச்..எஸ்., காலனியை சேர்ந்த கவின், 39, மசக்காளிபாளையத்தை சேர்ந்த சக்திவேல், 30, நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், 35, சவுரிபாளையத்தை சேர்ந்த ராஜ், 42, ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 14,800 பணம் மட்டும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விபசாரம்; 4 பேர் கைது
கவுண்டம்பாளையம், சேரன் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் சேரன் நகரில் உள்ள ஜிந்து செபாஸ்டின் என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இரண்டு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த போத்தனுார், திருமலை நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ், 25, கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த ஜிந்து செபாஸ்டின், 31, திருப்பூர் நம்பியூரை சேர்ந்த மணிமேகலை, 38, திருப்பூர், புதுார் பிரிவை சேர்ந்த மாதேஸ்வரி, 33 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

