/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்டி கிரைம் செய்திகள்: வீட்டில் பணம், நகை திருட்டு
/
சிட்டி கிரைம் செய்திகள்: வீட்டில் பணம், நகை திருட்டு
சிட்டி கிரைம் செய்திகள்: வீட்டில் பணம், நகை திருட்டு
சிட்டி கிரைம் செய்திகள்: வீட்டில் பணம், நகை திருட்டு
ADDED : அக் 27, 2025 10:19 PM
வீட்டில் பணம், நகை திருட்டு சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன், 49. கடந்த, 25ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் வீடு திரும்பிய போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்று பவுன் செயின், ரூ.10 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். அவர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி செல்வபுரத்தை சேர்ந்தவர் நாகமணி, 65. இவர் செல்வபுரம் பேரூர் ரோட்டில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியது. அவர் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பைக் ஓட்டி வந்த செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சாகான் அலி, 18 என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

