sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிட்டி கிரைம் செய்திகள்

/

சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்


ADDED : ஏப் 30, 2025 12:25 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமாநிலத்தவரிடம் வழிப்பறி


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சஜீத், 20; வடவள்ளியில் தங்கியிருந்து, கூலி வேலைக்கு சென்று வருகிறார். கடந்த 26ம் தேதி மாலை, தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து வடவள்ளி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பேர், சஜீத்தை வழிமறித்து, அவரது 'ஜி பே'வை பயன்படுத்தி, ரூ.16 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். சஜீத் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எட்டு லேப்டாப்கள் திருட்டு


ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார், 34; கிக்கானி பள்ளி அருகில், ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், ரஞ்சித் குமாரை பார்க்க, ஒருவர் நிறுவனத்திற்கு வந்தார். அவரை முதல் தளத்தில் காத்திருக்கும்படி , ஊழியர் சோபனா தெரிவித்து விட்டு கீழே சென்றார். சிறிது நேரத்தில் அந்த நபர், ஒரு 'பேக்' உடன் அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பிறகு, சோபனா மேலே சென்று பார்த்தபோது, எட்டு லேப்டாப்கள் திருட்டு போயிருந்தன. ரஞ்சித் அளித்த புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தவறி விழுந்தவர் பலி


சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பரத் கண்ணன், 36; வெல்டிங் தொழிலாளி. கடந்த 24ம் தேதி கிராஸ் கட் ரோட்டில் உள்ள, ஒரு துணிக்கடையில் உள்ள பார்க்கிங் பகுதியில், ஏணியில் ஏறி நின்றபடி வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் அவரின் பின் தலையில், காயம் ஏற்பட்டது. அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

155 மது பாட்டில்கள் பறிமுதல்


அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அங்கு மது விற்பனை நடந்து கொண்டிருந்தது. அங்கு வைத்திருந்த 155 மதுபாட்டில்கள், குட்கா 45 பாக்கெட் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த காளிதாஸ், 49 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us