ADDED : ஜூன் 10, 2025 09:58 PM
டாக்ஸி டிரைவர் மீது தாக்குதல்
வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் டேவிட் மார்க், 28; கால் டாக்ஸி டிரைவர். கடந்த 8ம் தேதி மதியம் தனது தந்தை மற்றும் கவிதா என்பவரை அழைத்துக்கொண்டு வேலாண்டிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் காரை நிறுத்த முயன்றபோது, அங்கிருந்த, இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். காரை இப்படியா ஓட்டுவது என கேள்வி எழுப்பினர். டேவிட்டின் தந்தை மற்றும் கவிதா குறுக்கிட்ட போது, மூவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். சம்பவம் குறித்து டேவிட் சாய்பாபா காலனி போலீசில் அளித்த புகாரில் போலீசார், மூவர் தாக்கிய திருச்சியை சேர்ந்த அரவிந்த், 22 மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிராஜ், 21 ஆகியோரை கைது செய்தனர்.
கார் கவிழ்ந்து வாலிபர் பலி
சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 26. இவர் தனது நண்பர்களான லோகேஷ், 25 மற்றும் கோகுல்நாத் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இதில் காரில் அமர்ந்து சென்ற லோகேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோகுல் நாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் கைது
துடியலுார் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறா என்பதை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் துடியலுார், வடமதுரை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் உள்ள, ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, அங்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. குட்கா விற்ற சிவகங்கையை சேர்ந்த சங்கரலிங்கம், 38 என்பவரை போலீசார் கைது செய்தனர்.