ADDED : ஜூன் 29, 2025 12:45 AM
பைக் மோதி முதியவர் பலி
கவுண்டம்பாளையம், கருப்புசாமி நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம், 81. கடந்த 27ம் தேதி மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார் ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனம், கட்டுப்பாடு இல்லாமல் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு கவுண்டம்பாளையம், சங்கனுார் ரோடு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி மதுவிற்பனை செய்வது தெரியவந்தது.
மது விற்பனையில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலியை சேர்ந்த குருசாமி, 66 என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.