ADDED : ஜூலை 30, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா விற்றவருக்கு சிறை
கோவை ராமநாதபுரம் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புலியகுளம் கருப்பராயன் கோவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் நடத்திய சோதனையில், கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர், கோவை அம்மன்குளம் ஏரிமேட்டை சேர்ந்த நாகார்ஜூன்,19 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
மதுவிற்பனை; ஒருவர் கைது
கோவை, போத்தனுார் சாரதா மில் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்யப்படுவதாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அதில், மதுவிற்பனை நடப்பது தெரிந்தது. மது விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த, முருகேசன், 32 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 32 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.