ADDED : ஜூலை 31, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
பீளமேடு, எல்லை தோட்டத்தை சேர்ந்த சரத்குமார்,33, சரவணம்பட்டி, மருதம் நகர் அருகே ஏரிப்பகுதியில், பைக்கில் சென்ற போது, ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தேனிமாவட்டம், சின்னமனுாரை சேர்ந்த சரவணகுமார்,23, ரவி ஆகியோர், கத்தியை காட்டி மிரட்டி, சரத்குமாரிடம் பணம் பறித்தனர். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரித்து சரவணகுமாரை கைது செய்தனர். ரவியை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
செல்வபுரம் போலீசார், தெலுங்குபாளையம், வேடபட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த நவ்பல்,22, பனைமரத்துாரை சேர்ந்த அரவிந்த்,23, ஆகியோர், 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

