ADDED : ஆக 06, 2025 10:19 PM
பைக்குகள் மோதல்; வாலிபர் பலி
கோவை, சங்கனுார் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 20. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் இடையர்பாளையத்தை சேர்ந்த ஆதர்ஷ், 19 உடன், பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
100 அடி ரோட்டில் இருந்து நவஇந்தியா நோக்கி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த பைக் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதில் ஹரிபிரசாத் தலையில், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ஆதர்ஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதிரில் பைக்கில் வந்த, கரும்புக்கடையை சேர்ந்த ஷாஜகான், 37 தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து
கோவை, இருகூர் தேவர் சந்தையை சேர்ந்தவர் அங்கமுத்து, 71. இருகூர் முதலியார் தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த சரக்கு வாகனம் அங்கமுத்து மீது மோதியது. படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனேவே உயிரிழந்தது தெரிந்தது. கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரக்கு வாகனத்தின் டிரைவர் கிணத்துக்கடவை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
சரவணம்பட்டி போலீசார், துடியலுார் ரோட்டில் புகையிலை விற்பனை குறித்து சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட, வெள்ளக்கிணறு, பொன்விழா நகரை சேர்ந்த காந்திமதி, 40 என்பவரை கைது செய்தனர்.