தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : பிப் 28, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொலை முயற்சி; இருவருக்கு வலை


கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தன்கரை பெருமாள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 51. இவரது மகன், பூவரசன், 27. இருவரும் வரதராஜபுரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே உள்ள கல்லுக்குளி பகுதியில் தங்கி கட்டடத் தொழிலுக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம், பூவரசன், அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது அவருக்கு எதிரில் இருந்த இருவருடன் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து பூவரசன் கிளம்பினார். அவர் அவிநாசி ரோட்டில், நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இருவரும், தகராறில் ஈடுபட்டு, அங்கு கிடந்த சிமென்ட் கல்லை எடுத்து தாக்கினர். படுகாயமடைந்த பூவரசன், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முருகேசன் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பாத்திரக்கடையில் திருட்டு


கோவை வடவள்ளியை சேர்ந்தவர் செல்வரத்தினம், 43. இவர் ராஜவீதியில், பாத்திரக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 21ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கடையை திறந்த போது, பித்தளைப் பொருட்கள், காஸ் ஸ்டவ் உள்ளிட்டவை மாயமாகி இருந்தன. அவர் அளித்த புகாரின் பேரில், பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பஸ்சில் செயின் பறிப்பு


கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி, 53. கடந்த, 6ம் தேதி அவிநாசி ரோட்டில் உள்ள கண் மருத்துவமனைக்கு பஸ்சில் சென்றார். பின்னர் வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் மாயமாகி இருப்பதை கண்டார். அவர் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பஸ் மோதி ஒருவர் பலி


பீகார் மாநிலம், கயாவை சேர்ந்தவர் சுக்தேவ் மன்ச், 54. நேற்று முன்தினம் தடாகம் ரோட்டில் முத்தண்ணன்குளம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சுக்தேவ் மன்ச் உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை, பணம் திருட்டு


கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பாபு ஜனார்த்தனன், 71. நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது அவர் சாவியை வீட்டுக்கு வெளியே செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் அருகே, மறைத்து வைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டு அலமாரியில் இருந்த, மூன்றரை பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் மாயமாகி இருந்தது. பாபு ஜனார்த்தனன் புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us