தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : பிப் 29, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செயின், மொபைல்போன் பறிப்பு


திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீவத்சன், 19. கோவை காளப்பட்டி, தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி தனியார் கல்லுாரியில், டிப்ளமோ பயின்று வருகிறார். கடந்த, 27ம் தேதி தனது பைக்கில், நண்பர்களுடன் ஆவாரம்பாளையம் காமதேனு நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர் அவரை வழிமறித்து பைக் சாவியை பறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மொபைல்போனை பறிக்க முயன்றனர். ஸ்ரீவத்சன் மறுக்கவே, அவரை அருகில் இருந்த ரயில்வே பாலத்துக்கு அழைத்து சென்று, அவரிடமிருந்து சில்வர் செயின், மொபைல்போன் ஆகியவற்றை பறித்து தப்பினர். ஸ்ரீவத்சன் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த பீளமேடு போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஊழியரை திட்டியவருக்கு சிறை


கோவை, இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் இரண்டாம் நிலை கிளார்க்காக பணிபுரிந்து வருபவர் காலித் அஹமத், 52. அவர் நீதிமன்றத்தில் பணி செய்த போது, கோவை காந்திபுரத்தை சேர்ந்த இளமுருகன், என்பவர் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்தார். இந்நிலையில் நீதிபதி, அவரை வெளியேற்றுமாறு, காலித் அஹமத்துக்கு உத்தரவிட்டார். காலித் அஹமத் மற்றும் மேலும் இருவர் சேர்ந்து, இளமுருகனை வெளியேற்றினர். இளமுருகன் தகாத வார்த்தைகளால் காலித் அஹமத்தை திட்டினார். அவரை பணி செய்யாமல், தடுத்து மிரட்டினார். காலித் அஹமத் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, இளமுருகனை சிறையில் அடைத்தனர்.

அரிவாள் காட்டி மிரட்டிய இருவர் கைது


கோவை ராமநாதபுரம், ஒலம்பஸை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 37. தனியார் பிளவர் மில்லில் டிரைவராக பணிபுரிகிறார். இவருடன் திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லுார் கோட்டை சேர்ந்த இசக்கிபாண்டி, 38, இசக்கிராஜா, 26 ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும், முத்துப்பாண்டியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம், இசக்கிபாண்டி, இசக்கிராஜா, ஆகிய இருவரும் முத்துப்பாண்டி வீட்டுக்குள் நுழைந்து அவரை தகாத வார்த்தைகளால் அரிவாளை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

லாட்டரி விற்பனை; ஒருவர் கைது


காந்திபுரம் இளங்கோ நகர் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடப்பதாக, காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த தெற்கு உக்கடத்தை சேர்ந்த முகமது அல்தாப், 24 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து எட்டு கேரள மாநில லாட்டரிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண் குளிப்பதை பார்த்தவர் மீது வழக்கு


குனியமுத்தூரை சேர்ந்த, 24 வயது பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 25ம் தேதி இவர் வீட்டின் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தார். இதனை அருகே வசிக்கும் நபர் பார்த்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, அவரது தாய், சகோதரி உள்ளிட்ட அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்பெண்ணின் புகாரின்பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் என்பவரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us