தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : மார் 04, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டாக்டரிடம் பணம் பறிப்பு


கோவை மசக்காளிபாளையம் ராம்லட்சுமண் நகரை சேர்ந்தவர் ஷியாம் குமார், 32; தனியார் மருத்துவமனை டாக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு, கொடிசியா மைதானம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள், அரிவாளை காட்டி, பணம் கேட்டு மிரட்டினர். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அவரது மொபைல்போனை பறித்து, அதன் வாயிலாக, ரூ.20 ஆயிரத்தை கூகுள் பே வாயிலாக, தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றினர். ஷியாம்குமாரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற மர்மநபர்கள், ஏ.டி.எம்., கார்டை பறித்துக் கொண்டனர். அவரை தங்களுடன் அழைத்துச் சென்று, ஏ.டி.எம்., கார்டு வாயிலாக ரூ.50 ஆயிரம் எடுத்தனர். அவரை பீளமேடு ரயில்வே மேம்பாலம் அருகே இறக்கி விட்டு, மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். ஷியாம்குமார் புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

லாரி மோதி மாணவர் பலி


மயிலேறிபாளையத்திலுள்ள தனியார் இன்ஜி., கல்லூரியில், தேனி மாவட்டத்தை சேர்ந்த குணால், 20, ஒத்தக்கால்மண்டபத்தில் தங்கி, இரண்டாமாண்டு படித்து வந்தார். பைக்கில் ஒக்கிலிபாளையம்- மயிலேறிபாளையம் சாலையில், கல்லூரிக்கு சென்றார். விநாயகர் கோவில் அருகே எதிரே வந்த தண்ணீர் லாரி மீது பைக் மோதியது. படுகாயமடைந்த குணால், சம்பவ இடத்திலேயே பலியானார். செட்டிபாளையம் போலீசார் விசாரணையில், நண்பரின் பைக்கை கொடுக்க கல்லூரி விடுதிக்கு செல்லும்போது, விபத்தில் சிக்கியது தெரிந்தது.

பணம் பறித்தவர் கைது


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலை, 52; கோணவாய்க்கால்பாளையம் டாஸ்மாக் மது பாரில் சப்ளையர். நேற்று திருமலை, பைக்கில் கோணவாய்க்கால்பாளையத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு மர்மநபர், கத்தியைக்காட்டி மிரட்டி, ரூ.200 பறித்து தப்பினார். திருமலை புகாரின்பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், பணம் பறித்தது கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த டேவிட்ராஜா, 25 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மாணவியரை கேலி செய்தவருக்கு சிறை


ஆவாரம்பாளையத்தில் தனியார் கல்லுாரி மாணவியரை, டிரைவர் ஒருவர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்தார். மாணவியர் கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அந்த டிரைவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க, கல்லுாரி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊழியர்கள் கண்காணித்ததில் டிரைவர் மாணவியரை கிண்டல், வன்கொடுமை செய்தது தெரிந்தது. கல்லுாரி நிர்வாகம் சார்பில், காட்டூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலீசார் கோவை காந்திபுரம், 100 அடி ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார், 28 என்பவரை சிறையில் அடைத்தனர்.

வீட்டில் நகை, வெள்ளி திருட்டு


வெள்ளலூர் கோணவாய்க்கால்பாளையம் அற்புதம் நகரை சேர்ந்த மனோஜ் குமார் மனைவி உதயராணி, 33. நேற்று முன்தினம் தனது மகனை அழைத்து வர, அருகில் உள்ள பள்ளிக்கு சென்றார். வீட்டு கதவை பூட்டாமல் சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார்.

அலமாரியில் மணிபர்சில் இருந்த, 4 கிராம் நகை, வெள்ளி செயின் திருடு போயிருந்தது. உதயராணி புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us