தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : மார் 19, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவரை தாக்கிய வாலிபர் கைது


கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பூபாலன், 19; தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், தனது நண்பர் ஒருவருடன் ஆர்.எஸ்.புரம் சித்தி விநாயகர் கோவில் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த வாலிபர் திடீரென, பூபாலனிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கல்லால் தாக்கினார். பலத்த காயம் அடைந்த பூபாலனை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பூபாலன் புகாரின் படி, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தாக்கிய பூமார்க்கெட்டை சேர்ந்த மணிகண்டன், 26, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பைக் திருடிய வாலிபர் கைது


திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஹரி, 20; தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது சகோதரரின் பைக்கை, வீட்டின் முன் நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது, வாலிபர் ஒருவர் பைக்கை திருடி செல்வதை கண்டார்.

உடனே அவர் சத்தம் போட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்டது, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அருண், 28, என்பது தெரிந்தது. ஹரி புகாரின்படி, போலீசார் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாய்கள் மர்ம சாவு ஏன்; போலீசார் விசாரணை


வெள்ளலூர், செந்தூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் தனசீலன், 60, இவர், ஐந்து நாய்களுக்கு உணவளித்து வந்தார். கடந்த, 11ல் ஒரு நாய் இறந்து கிடந்தது. மீண்டும், 12, 14ம் தேதிகளிலும் தலா ஒரு நாய் இறந்து கிடந்தன. இதுகுறித்து தளசீலன் புகாரின்பேரில், போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us