தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்


ADDED : மார் 21, 2024 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியையிடம் நகை பறிப்பு


கோவை நஞ்சுண்டாபுரம் பாரதி நகரை சேர்ந்த ஜெசி மெரிட்டா, 50; தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு, நஞ்சுண்டாபுரம் சாலையில் தனது மகளுடன் நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால், பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெசி மெரிட்டா கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றார். ஜெசி மெரிட்டா புகாரின்படி, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

--மொபட்டில் சென்ற மூதாட்டி பலி


கோவை சின்ன வேடம்பட்டி, உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 62; இவரது மனைவி சின்னம்மாள், 57. நேற்று முன்தினம் கணவன்,- மனைவி இருவரும் மொபட்டில் பாலசுந்தரம் ரோட்டில் சென்றனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த சின்னம்மாள் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறன்றனர்.

--குட்கா விற்ற இருவர் கைது


கோவை ரத்தினபுரி போலீசார், செக்கான் தோட்டம் பகுதியில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் கடையில் இருந்த, 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கனகராஜ், 32 மற்றும் ராஜன், 46 ஆகியோரை கைது செய்தனர்.

ஐந்து மாணவர்கள் கைது


ஈச்சனாரி அருகேயுள்ள தனியார் கல்லூரியில், சேலத்தை சேர்ந்த சவுந்தரராஜன், பி.இ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி - செட்டிபாளையம் சாலையில், தனலட்சுமி என்பவரின் வீட்டில் அறை எடுத்து தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன், கல்லூரி மாணவி ஒருவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அப்பெண்ணின் காதலன் சேது, சவுந்தரராஜனிடம் கேட்டபோது, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன் சேது உட்பட, ஐந்து பேர் சவுந்தரராஜனின் அறைக்கு வந்தனர். சவுந்தரராஜனை தாக்கி தப்பினர். அருகே வசிப்போர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சவுந்தரராஜன் புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீசார் விசாரித்து, மாணவர்கள் சேது, மணிகண்டன், பாலாஜி, ரூபன்குமார் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us