வழிப்பறி செய்தவருக்கு சிறை
வெரைட்டிஹால் ரோடு, சி.எம்.சி., காலனியை சேர்ந்தவர் விமல்ராஜ், 28. நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 25 என்பவர், விமல்ராஜிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால், விமல்ராஜின் கன்னத்தில் அரைந்து, சட்டை பையில் இருந்த ரூ. 500ஐபறித்து சென்றார்.
விமல்ராஜ் அளித்த புகாரில் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்றவர்கள் கைது
வடவள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு கடையில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ், 27 மற்றும் சிவராமன்,24 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து 28 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.