தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இருசக்கர வாகனம் திருட்டு

இருசக்கர வாகனம் திருட்டு

இருசக்கர வாகனம் திருட்டு


UPDATED : மே 17, 2026 06:34 PM

ADDED : மே 17, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 06:34 PM ADDED : மே 17, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்காநல்லுார் பகுதியை சேர்ந்தவர் கீதா. கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, வண்டியை சாவியுடன் விட்டு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் மாயமாகியிருந்தது. புகார் பதிவு செய்ததன் பேரில் சிங்காநல்லுார் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.

போதைப்பொருள் விற்பனை

ரயில்வே போலீசார் சோதனையின் போது, ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயில் பகுதியில், 4.2 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கேட்பாரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஸ்கோஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

குனியமுத்துார், பீளமேடு, சரவணம்பட்டி போலீசார் பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாதன், 37 நீலிகோணாம்பாளையம் தங்கதுரை , 50 நல்லாம்பாளையம் ஸ்ரீராம், 31 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்

குனியமுத்துார் போலீசார் ரோந்து பணியின் போது, சந்தேகப்படும்படி நின்று இருந்த நபரை விசாரித்தனர். அவர் கரும்புக்கடையை சேர்ந்த முகமது சபீர், 25 என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரிடம் இருந்த, 3.200 கிலோ கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us