/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவில் இன்ஜினியர் சங்க முதல் மாதாந்திர கூட்டம்
/
சிவில் இன்ஜினியர் சங்க முதல் மாதாந்திர கூட்டம்
ADDED : ஜூலை 31, 2025 10:07 PM

கோவை; கோவை மண்டலம் சிவில் இன்ஜினியர் சங்கத்தின் முதலாவது மாதாந்திர கூட்டம் ஜி.வி ரெசிடென்சி அருகில் உள்ள சியான் பிளாசா ஹோட்டலில் நடந்தது.
சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம், புகாரா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. இதில், இதயம் காப்போம் என்ற தலைப்பில் டாக்டர் ராஜேந்திரன் விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.
மேலும், சங்கத்தின் புதிய www.cozcena.com இணையதளம்அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து , உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, எஸ்.என்.ஏ., எர்த் மூவர்ஸ் மற்றும் எஸ்.ஆர்.டி., ப்ளூ மெட்டல்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சங்க தலைவர் பழனிச்சாமி , துணைத் தலைவர் தாமோதர சாமி, செயலாளர் செந்தில்நாதன் பொருளாளர் சுந்தரராஜன், உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.