/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு செய்முறை தேர்வு 26ல் துவக்கம்
/
10ம் வகுப்பு செய்முறை தேர்வு 26ல் துவக்கம்
ADDED : பிப் 23, 2024 12:41 AM
கோவை:கோவையில் பத்தாம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள், 26ம் தேதி துவங்கவுள்ளன. எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ்2, பிளஸ்1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளன. அதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு 26,27 ஆகிய தேதிகளில் முதல்கட்டமாகவும், 28,29 ஆகிய தேதிகளில் இரண்டாவது கட்டமாகவும் நடக்க உள்ளன.
இந்நிலையில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறை தேர்வுகளை நடத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.