150 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்
150 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம்
ADDED : மார் 12, 2026 04:51 AM

அ நிறம் | அளவு
கோவை: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று துவங்கின. கோவை மாவட்டத்தில், 159 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
தமிழ் தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 37, 839 மாணவர்கள் எழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 946 'ஸ்கிரைப்' நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஒரு மதிப்பெண், மொழித்திறன் பகுதியில் மட்டும் பாடத்திலிருந்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. தமிழ்த்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்.
டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் பவன்குமார், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆய்வு செய்தனர்.
