/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி
/
பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 07, 2025 09:59 PM

அன்னுார்; 'கணித பாடத் தேர்வு மிக எளிதாக இருந்தது' என 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 28ம் தேதி துவங்கியது. தமிழ், ஆங்கில பாடத் தேர்வுகள் முடிந்து விட்டன. நேற்று கணித பாட தேர்வு, நடந்தது. அந்த தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மிக எளிதாக இருந்தது
பால முரளி, கரியாம்பாளையம்: கணித பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகள் 14, 2 மதிப்பெண் கேள்விகள் பத்தும், ஐந்து மதிப்பெண் கேள்விகள் பத்தும், எட்டு மதிப்பெண் கேள்விகள் இரண்டும் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு மிக எளிதாக இருந்தது.
அதிக மதிப்பெண் பெற முடியும்
ரிஷிகேஷ், கிருஷ்ணகவுண்டன் புதூர்: கணித தேர்வு எளிதாக இருந்தது. அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும்.
சென்டம் பெற முடியாது
உமர் பாரூக், அன்னுார்: கணித பாடத் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆனால் ஐந்து மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் எளிதாக இருந்தன.