ADDED : ஜூன் 19, 2026 04:29 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் வரவேற்றார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் துணை செயலர் கோவிந்தசாமி தலைமை வகித்து, தொழிற்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளரான எழுத்தாளர் ஈரோடு கதிர், ஒழுக்கம், கல்வியின் முக்கியத்துவம், வாழ்க்கை மதிப்புகள் குறித்து விளக்கினார். அண்ணாமலை பல்கலை பேராசிரியரும் கல்லுாரியின் முன்னாள் மாணவருமான திருஞானசம்பந்தம், தொழிற்கல்வியின் அவசியம், ஒழுக்கம், திறன் மேம்பாடு குறித்து பேசினார்.
கல்லுாரி முதல்வர் துறை தலைவர்களையும், வாகனவியல் துறை தலைவர் மணிவண்ணன் முதலாம் ஆண்டு விரிவுரையாளர்களையும்,மின்னியல் துறை தலைவர் புவனேஸ்வரி முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அறிமுகப்படுத்தினர். 'நபா முன்னாள் மாணவர் சங்கம்' முதன்மை ஒருங்கிணைப்பாளர் அழகப்பா ஆறுமுகம், தலைவர் கலைமணி, பொருளாளர் சந்திரசேகர் பங்கேற்றனர். இயந்திரவியல் துறை தலைவர் மைக்கேல் ஞானராஜ் நன்றி கூறினார்.
