ADDED : ஜூன் 19, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில், தி.மு.க., சார்பில் இளைஞர்களுக்கான ஜென்சி கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகள் பற்றி கூறப்பட்டது.
மேலும், திராவிட கொள்கை விளக்கம் மற்றும் இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும், இணையதளம் கையாளும் முறைகள், தற்போதுள்ள த.வெ.க., அரசின் தவறுகளை இணையத்தில் சுட்டிக்காட்டுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
