/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை கல்லுாரிகளில் இன்று வகுப்புகள் துவக்கம்
/
அரசு கலை கல்லுாரிகளில் இன்று வகுப்புகள் துவக்கம்
ADDED : ஜூன் 30, 2025 12:08 AM
கோவை; அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இன்று, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க உள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், கவுன்சிலிங் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.கோவை அரசு கலைக் கல்லுாரியில் கலந்தாய்வு நிறைவில், மொத்தமுள்ள, 1,727 இடங்களில், 1,554 இடங்கள் நிரம்பின. அதாவது, 90 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன; 173 இடங்கள் நிரம்பவில்லை.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் துவங்க உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உயர்கல்வி குறித்த அரசின் திட்டங்கள், கல்லுாரி சார்ந்த அனைத்து தகவல்கள், விதிமுறைகளை விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வார காலம் அறிமுகப்பயிற்சித் திட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.