தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை

செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை

செம்மொழி பூங்கா ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை


ADDED : ஆக 18, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திபுரம்: காந்திபுரத்தில் 45 ஏக்கர் பரப்பில், ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கடந்தாண்டு திறக்கப்பட்டது. பூங்காவை பராமரிப்பதற்கு தூய்மை பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், செக்யூரிட்டிகள், எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்பட 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்தமுறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பளம் வழங்காததை கண்டித்து பூங்கா வளாகத்தில் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் கூறுகையில், ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்குவோம் என்றனர். ரூ.16 ஆயிரம் தான் தருகின்றனர். கடந்த மாதமும் தாமதமாக கொடுத்தனர். இம்மாதம் இன்னும் வரவில்லை. உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்றனர். 

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தல் காரணமாக பூங்கா பராமரிப்புக்கு அவசர ஒப்பந்தம் வழங்கினர். நிர்வாக ஒப்புதல் பெற்று புதிதாக டெண்டர் விட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை ஏற்கனவே ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனம் பராமரிக்கும். சம்பள பிரச்னை சீக்கிரம் சரி செய்யப்படும்’ என்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us