தொழில்நுட்ப பணியிடங்களை மறுசீரமைக்கக் கோரி போராட்டம்
தொழில்நுட்ப பணியிடங்களை மறுசீரமைக்கக் கோரி போராட்டம்
ADDED : ஆக 18, 2026 03:20 PM
கோவை: தொழில்நுட்பக் கல்வித்துறையில் தொழில்நுட்ப பணியிடங்கள் 15 ஆண்டுகளாக மறுசீரமைக்கப்படாமல் உள்ளன.
இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் பெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள், பதவி, ஊதிய உயர்வு கிடைக்காமல் பணிபுரிந்து, ஓய்வு பெறுவதாக, தொழில்நுட்ப அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சங்க மாநிலத்தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
15 ஆண்டுகளில் பல இயக்குநர்கள், துறை செயலர்கள் மாறிய நிலையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மறுசீரமைப்பு கோப்பு நிலுவையில் இருக்கிறது.
மறுசீரமைக்க கோரி வரும் 27, 28ல் அனைத்து அரசு பொறியியல் கல்லுாரிகளிலும் தொழில்நுட்ப பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து வேலை பார்ப்பார்கள்.
செப்., 2வது வாரத்தில் கல்லுாரிகள் முன் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், அக்., 2வது வாரத்தில் சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முன், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
