ADDED : ஜன 12, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' திட்டத்தில், துாய்மைபடுத்தும் பணி நடந்தது.
பள்ளி வளாகத்தில் துாய்மை பணியில், பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சத்துணவு பணியாளர்கள் இணைந்து செயல்பட்டனர்.
வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி, வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் சத்தியமூர்த்தி, பேரூராட்சி தலைவர் ஆர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.