/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி
/
ரயில் நிலையங்களில் தூய்மைப் பணி
ADDED : அக் 03, 2025 09:39 PM

கோவை: துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துாய்மையே சேவை எனும் பொருள்படும், 'ஸ்வச்சதா ஹி சேவா' இயக்கம் மத்திய அரசு அலுவலகங்களில் முன்னெடுக்கப்படுகிறது.
கோவை, போத்தனுார், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில், சில நாட்களாக ரயில்வே டிராக்குகள், அலுவலகங்கள், ரயில் நிலைய வளாகம், கேன்டீன் உட்பட அனைத்து பகுதிகளிலும் துாய்மை பணி நடந்து வருகிறது.
வடிகால்கள் துார்வாரப்பட்டு, குப்பை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துாய்மையே சேவை 2025 இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.