தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரங்கநாதர் கோவில் வளாகத்தில் துாய்மை பணி

அரங்கநாதர் கோவில் வளாகத்தில் துாய்மை பணி

அரங்கநாதர் கோவில் வளாகத்தில் துாய்மை பணி


UPDATED : அக் 18, 2026 07:08 PM

ADDED : அக் 18, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:08 PM ADDED : அக் 18, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் வளாகத்தை, வி த லீடர்ஸ் அமைப்பினர் சுத்தம் செய்தனர்.

காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள், தாசர்களுக்கு வாழை இலை போட்டு அரிசி, பருப்பு, காய்கறிகளை படையல் படைத்தனர். இதனால் கோவில் முன்பு வாழை இலைகள் உள்ளிட்ட குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தன. இந்த குப்பைகளை வி த லீடர்ஸ் அமைப்பினர், காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, சுத்தம் செய்தனர்.

அமைப்பின் தன்னார்வலர்கள் சங்கீதா, பிரபு, கணேஷ் சம்பத்குமார் வீணாவதி ஆகியோர் கூறுகையில்,' அரங்கநாதர் கோவிலில் சுத்தம் செய்யும் பணிகளில், வி த லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டோம். சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பைகளை சுத்தம் செய்து, நகராட்சி வாகனத்தில் ஏற்றி அனுப்பினோம். இது மாதிரி கோவில்கள் தூய்மை பணிகளிலும், மரக்கன்றுகள் நடுவதிலும் ஈடுபட வேண்டுமென அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்பேரில் நாங்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us