தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நாளை நடக்கிறது ‘தினமலர்’ அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

நாளை நடக்கிறது ‘தினமலர்’ அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி

நாளை நடக்கிறது ‘தினமலர்’ அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘அ’னா, ‘ஆ’வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நாளை நடக்கிறது.

வெற்றித்திருநாளான விஜயதசமியன்று, ‘தினமலர்’ நாளிதழ், எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், ‘அ’னா, ‘ஆ’வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை, ஆண்டுதோறும் நடத்துகிறது.

இந்தாண்டு எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. நாளை (அக். 20) காலை 7:35 முதல் 9:00 மணி வரை, ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கோ–ஸ்பான்சராக இணைந்துள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு, பதிவு எண்ணுடன் கூடிய தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதை, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க வரவேற்பு பகுதியில் உள்ள, தினமலர் ஊழியர்களிடம் காட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதற்கு அனுமதி இலவசம்.

பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், ‘ஸ்கூல் பேக்’ மற்றும் ராம்ராஜ் காட்டன் குட்டீஸ் வேட்டி, சட்டை கிப்ட் ஆக வழங்கப்படும்.

பங்கேற்கும் முக்கிய ஆளுமைகள்!


சிறப்பு விருந்தினர்களாக, கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவிதேஜா, அரசு மருத்துவமனை ‘டீன்’ கீதாஞ்சலி, கதிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கதிர், வழக்கறிஞர் விஜயரகுநாத், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன்தாஸ் மற்றும் அறங்காவலர் மோகன்தாஸ் ஆகியோர் வருகை புரிகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us