/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணி தீவிரம்
/
ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணி தீவிரம்
ADDED : அக் 09, 2024 10:11 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பகுதிகள், தூய்மையே சேவை திட்டத்தில் சுத்தம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே குப்பையும், டாய்லெட் பகுதியில் அதிக அளவு செடிகள் முளைத்து புதர் சூழ்ந்தும் காணப்பட்டது. இதனால் ரயில் பயணியர் அவதிப்பட்டனர்.
இதை தொடர்ந்து, தூய்மையே சேவை திட்டத்தின் வாயிலாக, ரயில்வே கண்காணிப்பாளர் ரவீந்திர நாராயண குப்தா தலைமையில், ரயில்வே பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வாயிலாக, பிளஸ்டிக் கழிவு மற்றும் கழிப்பிடம் அருகே இருந்த புதர் செடிகளை அகற்றி, நடைமேடையை சுத்தம் செய்தனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகம், சுத்தமாக காணப்பட்டது.