/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்
/
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்
ADDED : ஆக 08, 2025 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சி சார்பில், சிந்தாமணிப் புதூரில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது.
முகாமில் பங்கேற்ற ஒருவர், தனது, 3 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறவிட்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களான ஜோதிமணி, சுமதி ஆகியோர் பணத்தை கண்டெடுத்தனர். அதை அங்கிருந்த போலீஸ் உதவி மைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மைக்கில் இதுகுறித்து அறிவித்தார். இதையடுத்து பணத்தை தவறவிட்ட நபரிடம், பேரூராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலையில் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர். இரு தூய்மை பணியாளர்களின் செயலுக்கு, அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.