/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு சுற்றுலா
/
தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு சுற்றுலா
ADDED : டிச 30, 2024 12:14 AM
அன்னுார்; பிள்ளையப்பம்பாளையம் தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த 2020 ஜன., 6ம் தேதி கிராம ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றனர். வருகின்ற ஜன., 5ம் தேதி அவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்களை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்கள், மோட்டார் ஆபரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், 100 நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் 52 பேரை, குடும்பத்துடன், சென்னைக்கு ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
சென்னை செல்லும் வழியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், சென்னையில் மெரினா பீச், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர்.
இதில் ஊராட்சி தலைவர் லட்சுமண மூர்த்தி, ஊராட்சி செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்தாண்டு ஒத்துழைப்பு தந்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.

